அதிகரிக்கும் சீனா ஆதிக்கம்: யுனெஸ்கோவில் மீண்டும் இணைய அமெரிக்கா முடிவு...!
US Wants to Rejoin UNESCO due to china dominance
பாரீஸை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு கல்வி, பண்பாடு, அறிவியல் மற்றும் தொடர்பு துறை மேம்பாட்டிற்காக இயங்கி வருகிறது. 193 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் இந்த அமைப்பில் அமெரிக்கா முக்கிய நன்கொடையாளராக இருந்து வந்தது.
ஆனால் கடந்த 2011-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தை யுனெஸ்கோவில் இணைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் யுனெஸ்கோவிற்கு வழங்கும் நிதி உதவியை ரத்து செய்தன. மேலும் இஸ்ரேலின் கோரிக்கையை யுனெஸ்கோ ஏற்க மறுத்ததை தொடர்ந்து அமெரிக்கா யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் யுனெஸ்கோவில் இணைய முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா வெளியறவு மற்றும் மேலாண்மை பிரிவு இணை அமைச்சர் ரிச்சா்ட் வா்மா தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 12 ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகை 5,100 கோடி ரூபாயை செலுத்த அமெரிக்கா முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அமெரிக்காவில் மீண்டும் சேர்ப்பதற்கான வாக்கெடுப்பு அடுத்த மாத யுனெஸ்கோ கூட்டத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் யுனெஸ்கோவில் அமெரிக்கா வெளியேறிய பிறகு சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமெரிக்கா மீண்டும் யுனெஸ்கோவில் இணைய முடிவு செய்துள்ளது.
English Summary
US Wants to Rejoin UNESCO due to china dominance