ஈரான் மீது பொருளாதாரத் தடை.. அமெரிக்கா, பிரிட்டன் அதிரடி.!!
USA and UK imposed economic sanctions on Iran
கடந்த பல மாதங்களாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்த வரும் நிலையில் மத்திய கிழக்கு உள்ளிட்ட சில நாடுகள் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஈரான் உள்ளிட்ட சில நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது போர் தொடுத்து வரும் நிலையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ ஜெனரர்கள் உட்பட சில அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி இரவு சுமார் 800-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஆனால் அதனை இஸ்ரேல் ராணுவம் கனகச்சிதமாக முறியடித்தது.
இது குறித்து ஏற்கனவே அறிந்த அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடாது என ஈரானுக்கு எச்சரித்து இருந்த நிலையில் அதனையும் மீறி வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. எச்சரிக்கை மீறி தாக்குதல் நடத்தியதற்காக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சேர்ந்து பொருளாதார தடை அறிவித்துள்ளன
உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு ஈரான் அதிக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்துவரும் நிலையில் நாட்டு பொருளாதாரத்தில் கணிசமான பங்கை கச்சா எண்ணெய் வர்த்தகம் வகிக்கிறது. இதற்கிடையே பொருளாதாரத்தில் தடைகள் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவும் பிரிட்டனும் ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளதால் ஈரானின் ராணுவ நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க
English Summary
USA and UK imposed economic sanctions on Iran