கொடூரம்: சாலையில் இரண்டாக முறிந்து விழுந்த விமானம் - வைரல் வீடியோ!
USA Plane crash Accident Video viral
அமெரிக்காவில் ஒரு பயங்கர விபத்து நடந்துள்ளது, இதில் ஒரு விமானம் நெடுஞ்சாலையில் மோதி இரண்டாக முறிந்தது. இந்த விபத்தைப் பற்றி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெற்கு டெக்சாஸின் விக்டோரியாவில் உள்ள ஸ்டேட் ஹைவே லூப் சாலையில் பிற்பகல் 3 மணியளவில் இரட்டை எஞ்சின் ப்ரொப்பல்லர் விமானம், சாலையில் செல்லும் 3 கார்கள் மீது மோதி கீழே விழுந்து முறிந்தது.
விமானம் சாலைக்கு மேல் தாழ்ந்த நிலையில் பறந்த போது, அது திடீரென கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர், அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விக்டோரியா பகுதி போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான விமானம் பைபர் பிஏ-31 இரட்டை எஞ்சின் வகையை சேர்ந்தது.
விபத்து நடந்தபோது விமானத்தில் விமானி மட்டுமே இருந்தார். அவர் உயிர்தப்பிய நிலையில், போலீசார் அவரிடம் விசாரணை நடத்துவதாக கூறியுள்ளனர்.
English Summary
USA Plane crash Accident Video viral