சுனாமி எச்சரிக்கை | தென் பசுபிக் பெருங்கடல்: வானூட்டு தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி! - Seithipunal
Seithipunal


தென் பசுபிக் பெருங்கடல் பகுதியான, வானூட்டு தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று இரவு பதிவாகியுள்ளது.

இது ரிக்டர் அளவு கோளில் 7.0 ஆக பதிவானதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


மேலும் சில முக்கிய செய்திகள் : நாமக்கல்லில் வரலாறு காணாத அளவுக்கு முட்டை விலை உயர்ந்துள்ளது. முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகளாக‌‌ நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

வரலாற்றில் முதல்முறையாக முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


* காரைக்கால் கடலில் குளித்துக் கொண்டிருந்த பீஹார் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்களான முன்னா தாக்கூர் (வயது 15) மற்றும் சிக்கந்தர் குமார் தாக்கூர் (வயது 14) ஆகியோர் அலையில் சிக்கி திடீரென மயமாகியுள்ளனர்.

இதில் சிறுவன் முன்னாவின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், அவரது தம்பியின் உடலை தேடி பணி நடந்து கொண்டிருக்கிறது.


* திருவள்ளூர் அடுத்த பெரியபாளையம் பகுதியில் தனியார் விடுதியில் இரும்பு கேட் சரிந்து விழுந்ததில் நித்தீஷ் (வயது10) என்ற சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த சிறுவன் நித்தீஷ் குடும்பத்தினர், வேண்டுதலுக்காக பெரியபாளையம் கோயிலுக்கு வந்து விடுதியில் தங்கியிருந்த போது இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vanadu earth quake


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->