#வாடிகன் :: முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் காலமானார்..!!
Vatican announces death of former Pope Benedict XVI
இன்று காலை போப் 16-ம் பெனடிக்ட் மறைந்ததாக வாட்டிகன் திருச்சபை அறிவித்துள்ளது. கடந்த 2013ல் போப் 16ம் பெனடிக்ட் வயது முதுமை காரணமாக பதவி விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து அர்ஜென்டினாவை சேர்ந்த ஆர்ச் பிஷப்பான ஜார்ஜ் மரியோ பெர்க்கோக்லியோ என்பவர் போப் முதலாம் பிரான்சிஸ் என்ற பெயரில் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தற்போதைய போப் முதலாம் பிரான்சிஸ் அவரை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது 16ம் பெனடிக்ட் முதலாம் பிரான்சிஸின் கைகளை பற்றியிருந்த புகைப்படங்களை வெளியிட்டு நெகிழ்ச்சியை வாடிகன் வெளிப்படுத்தியது.
முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் பதவியிலிருந்து ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 95 வயதில் அவரது வாடிகன் இல்லத்தில் காலமாகியுள்ளார். இவர் கத்தோலிக்க திருச்சபையை கிட்டதட்ட 8 ஆண்டுகள் வழிநடத்தினார். பாதிரியார்களால் பல தசாப்தங்களாக சிறுவர் துஷ்பிரயோகம் செய்வதை பொதுவெளியில் பேசினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், முன்னாள் போப்கள் 1977 மற்றும் 1982க்கு இடைப்பட்ட காலத்தில் பேராயராக இருந்தபோது முறைகேடு வழக்குகளைக் கையாள்வதில் தவறுகள் நடந்ததாக ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Vatican announces death of former Pope Benedict XVI