வியட்நாமை விரட்டும் டெங்கு: நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மக்கள் பீதி! - Seithipunal
Seithipunal


வியட்நாமில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதால் கடந்த மாதம் இறுதி வரை ஒரு வாரத்திற்கு 3 ஆயிரம் என டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த மாதம் முதல் பாதிப்பு இரு மடங்காக உயர ஆரம்பித்துள்ளதால் டெங்கு நோய் காரணமாக பாதிக்க பட்டோர் மொத்த எண்ணிக்கை 99,639 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹனோயில் மட்டும் ரூ. 20,548 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 மடங்கு அதிகம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் தாச் தட், தான் ட்ரை போன்ற நகரங்களில் நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால் தலைநகரில் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நோய் பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு என 2 வகை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டெங்கு காரணமாக வியட்நாமில் இதுவரை 27 பேர் உயிரிழந்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vietnam dengue fever cases increased


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->