7000 கிலோ யானை தந்தங்கள்! அதிர வைத்த சம்பவம்! அதிர்ச்சியில் விலங்கின ஆர்வலர்கள்! - Seithipunal
Seithipunal


வியட்நாம் நாட்டின் லோம் துறைமுகத்தில் ஏழு டன் தந்தங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி இருப்பது பெரும் அதிர்ச்சியை யதேற்படுத்தியுள்ளது.

அங்கோலாவில் இருந்து கடத்தப்பட்ட இந்த ஏழு டன் தந்தங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், இது மிகப்பெரிய வனவிலங்கு பொருட்கள் கடத்தல் சம்பவமாக அறியப்படுகிறது.

வியட்நாம் நாட்டை பொறுத்தவரை தந்தம் வர்த்தகம் செய்வது, தந்தத்தை கடத்துவது என்பது சட்டவிரோதமான செயல். ஆனால் யானை தந்தங்கள், பாங்கோலின் செதில்கள், காண்டாமிருகக் கொம்புகள் மற்றும் புலி சடலங்கள் கடத்தப்படுவது, பறிமுதல் செய்வதும் தொடர்கதையாவே உள்ளது.

இந்நிலையில், ஹைபோங் நகரின் லோம் துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தந்தத்தை கண்டுபிடித்தனர்.

இந்த தந்தங்கள் அங்கோலாவில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தி செல்லப்பட இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

முன்னதாக ஆப்பிரிக்காவில் இருந்து தந்தம், காண்டாமிருக கொம்புகள் உட்பட, கிட்டத்தட்ட 10 டன் விலங்குகளின் பாகங்களை கடத்திய நபருக்கு வியட்நாம் நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vietnam seizes 7 tonnes wildlife smuggling


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->