இலங்கை: இந்திய விசா மையத்தில் கொள்ளை.! தற்காலிகமாக சேவைகள் நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலிருந்து சுற்றுலாவிற்காகவும், தொழில் சார்ந்த பயணங்களுக்காகவும், குடும்ப உறவுகளை சந்திப்பதற்கும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் இந்தியா வருவது வழக்கம். இதற்காக இந்தியா சார்பில் இலங்கை தலைநகர் கொழும்புவில் இயங்கும் ஐ.வி.எஸ். தனியாா் நிறுவனம், இந்தியாவிற்கு வரும் இலங்கை பயணிகளுக்கு அனுமதி வழங்கும் விசா விண்ணப்பிக்கும் மையமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஐ.வி.எஸ். நிறுவனத்தில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. லேப்டாப், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஒரு சில ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.வி.எஸ். நிறுவனத்தின் விசா வழங்கும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் மறு அறிவிப்பு வரும் வரை விசா வழங்கும் மையம் மூடப்படும் என்றும், அவசர தூதரக நடவடிக்கை அல்லது விசா தொடர்பான தேவைகளுக்கு, உயர் ஆணையர்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ளுமாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Visa service temporarily stopped as Robbery in Indian visa centre


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->