வான்வெளியில் அரிதான நிகழ்வு.! வெறும் கண்களால் பார்க்கலாம்... எப்போ தெரியுமா.? - Seithipunal
Seithipunal


சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் போன்றவை மிகவும் அரிதாக நிகழும் நிகழ்வுகளாகும். சந்திரன் சூரியன் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. சம்பிரதாயத்தின் அடிப்படையில் இவற்றிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும்  அறிவியலைப் பொறுத்தவரை இது விண்வெளியில் நடக்கும் ஒரு நிகழ்வு.

மே 5ம் தேதியான நாளை புறநிழல் சந்திரகிரகணம் நிகழ இருப்பதாகவும் இது ஒரு அரிதான நிகழ்வு எனவும் நாசா தகவல் வெளியிட்டு இருக்கிறது. இந்தக் கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் எனவும் இந்திய நேரப்படி இரவு 8:44 முதல் அதிகாலை 1.01 மணி வரை நீடிக்கும் என்றும்  நான் சா தெரிவித்து இருக்கிறது.


பொதுவாக சந்திர கிரகணம் என்பது முழு நிலவின் போது மட்டுமே ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வாகும். பூமி சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் துல்லியமாக அமைந்திருக்கும் போது   பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழும். இந்த நிகழ்வால் சந்திரனாள் பிரதிபலிக்கும் சூரிய ஒளியானது மறைக்கப்படுகிறது. இதுவே முழு சந்திர கிரகணம் ஆகும். ஆனால் இந்தப் புற நிழல் சந்திர கிரகணமானது பாரம்பரிய சந்திர கிரகணத்திலிருந்து மாறுபடுகிறது.

தெளிவான வானத்துடன் இருக்கும் நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில் இந்த சந்திர கிரகணம் தெரியும் என நாசா அறிவித்திருக்கிறது. இந்த சந்திர கிரகணம் ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியிலும் ஆஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் தெரியும் என நாசா அறிவித்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

when a rare event is about to happen in space


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->