அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் கோகைன்! எப்படி வந்தது? தொடர் விசாரணை! - Seithipunal
Seithipunal


வெள்ளை மாளிகைக்குள் போதை பொருள் கண்டறியப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது:

அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளும் பலத்த பாதுகாப்புடன் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

வெள்ளை மாளிகையில் வழக்கமாக நடைபெறும் சோதனை நடத்தபட்ட போது, பவுடர் போன்று ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டது. அது என்னவென்று தெரியாமல் பரபரப்பு ஏற்பட்டது. 

அந்த மர்ம பொருள், தாக்குதலுக்கான வேலையாக இருக்கலாம் என்று நினைத்து கொண்டு வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

அந்த சமயத்தில் அதிபர் ஜோபைடன் வெள்ளை மாளிகையில் இல்லாததால், உயர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் மாளிகைக்கு விரைந்து வந்தனர். 

வெள்ளை மாளிகையின் எச்சரிக்கைகாக முன் வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டு, அந்த மர்ம பொருள் என்ன என்று தீயணைப்பு துறையினை ஆய்வு மேற்கொண்டு அது அபாயகரமானதில்லை என உறுதிப்படுத்திய பின்னர் மர்ம பொருள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 

அது போதை பொருளான கோகைன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் வெள்ளை மாளிகைக்குள் போதைப் பொருள் எப்படி என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

white house shut cocaine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->