H3N8 பறவை காய்ச்சலுக்கு சீனாவில் முதல் உயிரிழப்பு.!! WHO எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


சீனப் பெண் ஒருவர் N3H8 பறவை காய்ச்சலுக்கு பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வகை பறவை காய்ச்சலுக்கு உலகில் பலியான முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "H3N8 வகை பறவை காய்ச்சலுக்கு சீனப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வகை பறவை காய்ச்சலுக்கு மனிதர்கள் பலியாவது இதுதான் முதல் முறை. 

இந்த வகை பறவை காய்ச்சலுக்கு தற்போது வரை சீனாவில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டதல்ல. பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இணை நோய்களும் தீவிரமாக இருந்ததால் அவர் மரணம் அடைந்துள்ளார்" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

H3N8 வகை பறவை காய்ச்சல் பொதுவாக பறவைகளை மட்டுமே பாதிக்கும். பறவைகளிடமிருந்து விலங்குகளுக்கும் இந்த வகை காய்ச்சல் பரவும் தன்மை கொண்டது. இந்த பறவை காய்ச்சல் பெரிய கோழி பண்ணை மற்றும் காட்டு பறவைகளிடமிருந்து பரவி வருகிறது.

இதற்கு முன் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன் முதலில் கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய நிலையில் மூன்று வருடங்களுக்குப் பிறகு சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் உணவு சந்தையில் இருந்து விலகங்கள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவி இருக்க கூடும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO announced first death in chiina due to H3N8 bird flu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->