ஊறுவிளைவிக்கும் ரசாயனம் உள்ளது.. இந்திய "இருமல் மருந்து" மீது WHO புகார்..!! - Seithipunal
Seithipunal


இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள இருமல் மருந்தில் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் ரசாயனம் அதிக அளவில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குவாய்ஃபென்சில் என்ற இருமல் மருந்தில் டை எதீலின் கிளைக்கால், எதீலின் க்ளைக்கால் என்ற ரசாயனம் அதிக அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மைக்ரோனேசியா, மார்செல்ஸ் தீவுகள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்திய இருமல் மருந்துகளை ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் ஊறு விளைவிக்கும் ரசாயனங்கள் அதிக அளவில் உள்ளதாக புகார் தெரிவித்துள்ளது.

இந்த மருந்துகளை உட்கொள்வதால் மனிதர்களுக்கு நச்சுத்தன்மை மற்றும் மரணத்தை விளைவிக்கும் என்று ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டாளர்களான சிகிச்சை பொருள் நிர்வாகத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மருந்துகளின் உற்பத்தையாளர்கள் பஞ்சாப்பை தலைமை இடமாகக் கொண்ட க்யூபி பாராகெமிக்கல் லிமிடெட் மற்றும் தயாரிப்பின் சந்தைப்படுத்துபவர் இந்தியாவின் அரியானாவை தலைமை இடமாகக் கொண்ட டிரெல்லியம் பார்மா என்பதை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO complains about Indian cough medicine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->