மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - உலக சுகாதார மையம் வலியுறுத்தல்
WHO insists to take right action against medical companies
கடந்த 2022ஆம் ஆண்டு கலப்படம் செய்யப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்ட பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது உலகத்தையே அதிர வைத்துள்ளது. மேலும் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் காம்பியா, இந்தோனேஷியா மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஏழு நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
இதையடுத்து குழந்தைகள் குடித்த இருமல் மருந்தை சோதனை செய்தபொழுது, டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைக்கால் அதிகளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மருந்துகளை தயாரித்த அரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மசியூடிக்கல் நிறுவனம், இந்தோனேசிய மருந்து நிறுவனம் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனம் மீது உலக சுகாதார மையம் கடும் எச்சரிக்கை விடுத்ததோடு, மக்கள் பயன்படுத்த உடனடியாக தடை விதித்தது.
இந்நிலையில் தரம் குறைந்த மருந்துகளை தயாரித்த மருத்துவ நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார மையம் சம்பந்தப்பட்ட நாடுகளை வலியுறுத்தியுள்ளது.
மேலும் மருத்துவ நிறுவனங்களின் தயாரிக்கப்படும் மருந்துகளின் மூலப் பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், உரிய மருத்துவ விதிகளை பின்பற்றி அவை தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யவும் அந்நாடுகளை வலியுறுத்தியுள்ளது.
English Summary
WHO insists to take right action against medical companies