2030-க்குள் வாழ்வியல் நோய்களால் 50 கோடி பேர் பாதிக்க வாய்ப்பு - உலக சுகாதார நிறுவனம் - Seithipunal
Seithipunal


சுமார் 194 நாடுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், உடல் செயல்பாடுகளின் உலக நிலவரம் 2022 என்ற அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, 2030-க்குள் இதய நோய், உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட வாழ்வியல் தொடர்பான நோய்களால் சுமார் 50 கோடி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2020 முதல் 2030 இடைப்பட்ட காலங்களில் நீரிழிவு நோய், உடல் பருமன், இதய நோய் மற்றும் பிற நோய்களால் 500 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதனால் ஆண்டிற்கு உலகம் முழுவதும் 27 பில்லியன் டாலர் கூடுதல் மருத்துவ செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்க அரசாங்கங்கள் அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில் வாழ்வியல் நோயினால் பாதிக்கப்படுவதை தடுக்க மக்கள் தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் இதர செயல்பாடுகளை மேற்கொள்ள அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO says 50 crore people affected by lifestyle diseases by 2030


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->