பிரிட்டன் சிறையில் இருந்து விடுதலையானார் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்..!! - Seithipunal
Seithipunal



ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் செய்தியாளர் ஜூலியன் அசாஞ்ச். இவர் கடந்த 2006ம் ஆண்டில் விக்கி லீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். இதையடுத்து இவரது விக்கி லீக்ஸ் இணையதளத்தில் கடந்த 2010ம் ஆண்டு பல்வேறு ரகசிய ஆவணங்கள் அம்பலமாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின.

அவற்றில் அமெரிக்க ராணுவ ரகசியங்கள், மற்றும் ஈராக், ஆப்கானிஸ்தான் போர் தொடர்பான மிகவும் ரகசியமான ஆவணங்கள் என்று பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்கள் வெளியாகின. இதையடுத்து ஜூலியன் அசாஞ்ச் 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப் பட்டார். 

இதற்காக சுவீடன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ஜூலியன் அசாஞ்ச் 2012ம் ஆண்டு லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு அவருக்கு வழங்கி வந்த ஆதரவை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றதையடுத்து, பிரிட்டிஷ் போலீசார் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 5 ஆண்டுகளாக லண்டன் சிறையில் இருக்கும் அவர் மீது அமெரிக்காவை உளவு பார்த்து அதன் ராணுவ ரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச் சாட்டுக்களை அவர் மீது அமெரிக்கா சுமத்தியுள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையில் இருந்து விடுதலையாகி, வரும் புதன் கிழமை அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக விக்கிலீக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wiki Leaks Founder Julian Assange Freed From Britain Prison


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->