தென் கொரியாவில் காட்டுத்தீ; 04 பேர் பலி; 1000 ஆண்டுகள் பழமையான கோவில் எரிந்து நாசம்..!
Wildfire in South Korea
தென் கொரியாவின் தெற்குப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக 04 பேர் உயிரிழந்துள்ளதாதோடு, நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த காட்டுத்தீ காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
சான்சியோங் கவுண்டியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய காட்டு தீ, தற்போது மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளதுதோடு, சனிக்கிழமை இரவு நிலவரப்படி, சான்சியோங் தீ 25% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தீயினால் சுமார் 847 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளது என கூறப்படுகிறது.
இதனால், சான்சியோங்கிலிருந்து 260-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் உல்சான் மற்றும் கியோங்சாங் மாகாணத்தில் காட்டுத் தீயில் இருந்து தப்பி சுமார் 620 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தென் கொரியாவின் சியோண்டியுங்சன் மலையில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான உன்ராம்சா கோயில் நேற்று ஏற்பட்ட காட்டுத் தீயில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
இந்த காட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றதாகவும், கொரியா வனத்துறை தீயை கட்டுப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது, மேலும் சான்சியோங்கை ஒரு சிறப்பு பேரிடர் பகுதியாக அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.