கட்டுக்கடங்காத காட்டுத்தீ; இரண்டாயிரம் பேர் வெளியேற்றம்..! அமெரிக்காவில் சோகம்..!
Wildfires in the US evacuate 2000 people
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ அடுத்தடுத்து அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளன. அண்டை மாகாணமான தென் கரோலினாவின் ஹோரி, ஸ்பார்டன்பர்க், ஓகோனி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் காட்டுத்தீ பரவியுள்ளது.
500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்த தீயானது அதனை சுற்றியுள்ள 175 இடங்ளுக்கும் பரவியுள்ளது.
இதன்காரணமாக சுற்றியுள்ள சுமார் 04 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனை தொடர்ந்து, வட கரோலினா மாகாண கவர்னர் ஹென்றி மெக்மாஸ்டர் அங்கு அவசர நிலை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு காட்டுத்தீ பரவுவதை அடுத்து, அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இதுவரை 02 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்த வெளியேறி உள்ளனர். கடந்த ஒரு வாரமாக நடைபெறும் பணியில் இதுவரை 30 சதவீதம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பேரிடர் மீட்பு துறை தெரிவித்துள்ளது. எனவே தீயை அணைப்பதற்காக ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கடந்த ஜனவரி மாதம் பெரிய காட்டுத்தீ ஏற்பட்டது. ஜனவரி 31, 2025 நிலவரப்படி , காட்டுத்தீ 29 பேர் வரை இருந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அத்துடன், 200,000 க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றபட்டனர். மேலும் 18,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டமைப்புகள் அழிந்து போனது. காட்டுத்தீ மொத்தம் 57,000 ஏக்கர் (23,000 ஹெக்டேர்) நிலத்தை எரிந்து நாசமாகி போனமை குறிப்பிடத்தக்கது.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்யும் குளிர்காலம் நிலவியது, இது ஏராளமான தாவர வளர்ச்சியை ஊக்குவித்தது. இருப்பினும், இந்த குளிர்காலம் விதிவிலக்காக வறண்டதாக இருந்ததால், இந்த தாவரங்கள் வறண்டு, எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டவை. அக்டோபர் மாதத்திலிருந்து தெற்கு கலிபோர்னியாவில் மிகக் குறைந்த மழை பெய்துள்ளதாகவும், லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் நீர் ஆண்டின் தொடக்கத்திலிருந்து வெறும் 0.03 அங்குல மழையை மட்டுமே பதிவு செய்துள்ளதாகவும், இது 1944 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து ஆண்டின் மிகவும் வறண்ட தொடக்கமாகும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
English Summary
Wildfires in the US evacuate 2000 people