தலை முழுவதும் பேன்! விமானத்தில் கத்தி கூச்சலிட்ட பயணிகள்! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! - Seithipunal
Seithipunal


விமானத்தில் பயணித்த ஒரு பெண்ணின் தலையில் அதிக அளவில் பேன்கள் இருப்பதாக சக பயணிகள் கூச்சலிட்டதால் விமானம் அவசர அவசரமாக தரவிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லாஸ் ஏஞ்சல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்த விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் அந்த விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். அவ்வப்போது விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,கடந்த மாதம் ஜூலை 15ஆம் தேதி லாஸ் ஏஞ்சல் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி அமெரிக்கன் ஏர்லைன்ஸ்  விமானம் பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்த பயணிகள் பலரும் கூச்சலிட்டதால் விமான அதிகாரிகள் பதறினார்கள்.

விமானத்தில் பயணித்த பெண்ணின் தலையில் பேன்கள் இருப்பதாக சக பயணிகள் கூச்சலிட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் விமான நிறுவனம் கூறிய காரணங்கள் வேறுவாக இருந்ததாக விமானத்தில் பயணித்த சகப் பயணி ஒருவர் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ ஒன்னு மில்லியன் பார்வையாக கடந்து வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, பேன் பிரச்சனையால் பயணிகள் கூச்சலிட்டதால் பின் பிரச்சனைக்கு பிறகு அவசரமாக தரையறுக்கப்பட்ட விமானம் 12 மணி நேரம் கழித்து மீண்டும் இயக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman on board had to make an emergency landing after fellow passengers complained that she had a lot of lice on her head


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->