ஆப்கானிஸ்தானில் பெண்கள் 3ம் வகுப்புக்கு மேல் படிக்க தடை - தாலிபன் அரசு உத்தரவு.!
Womens allow study 3rd std in Afghanistan
ஆப்கானிஸ்தானில் பெண்கள் 3ம் வகுப்புக்கு மேல் தடை விதித்து தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் வேலைக்கு செல்லவும் 6-ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் தடை விதித்தது.
மேலும், பெண்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் அனைத்து பெண்களும் தங்கள் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் பூங்காக்களில் ஆண்கள் இருக்கும் போது பெண்களை அனுமதிக்கக் கூடாது. திரைப்படம், கேளிக்கை போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல கூடாது மற்றும் ஜிம் மற்றும் பூங்காகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் பெண்கள் தங்கள் உரிமைக்காக போராட முடியாமல் போய்விட்டது. பெண்களுக்கு எதிரான இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எதிராக பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களை நடத்த தடை விதித்து தாலிபான்கள் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் பெண்கள் 3ம் வகுப்புகளுக்கு மேல் படிக்க தடை விதித்து தாலிபான்கள் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அந்நாட்டு பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Womens allow study 3rd std in Afghanistan