27 ஆண்டுகளாக பெண்கள் மட்டும் வாழும் கிராமம்.. ஆனால் குழந்தை பிறக்கும் ஆச்சரியம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் ஒவ்வொரு நாட்டிலும் தங்களுக்கு ஏற்ப  சில வித்தியாசமான உணவு, உடை போன்ற பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். இதில் சில அபூர்வமான கிராமங்களும் அடங்கும்.

அந்த வகையில், கென்யாவின் உமோஜா என்ற கிராமத்தில் பெண்கள் மட்டுமே வாழ்கின்றனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 900க்கும் மேற்பட்ட பெண்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் ஆண்கள் இந்த கிராமத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 27 வருடங்களாகவே இந்த கிராமத்தில் இப்படி தான் நடந்து வருகிறது. ஆனாலும், இந்த கிராமத்தில் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது மட்டும் எப்படி என்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்திருக்கும்.

அதன்படி, இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் வெளியில் சென்று ஆண்களுடன் உறவு வைத்து கொள்வார்களாம். அதன் பிறகு இந்த கிராமத்திற்கு வந்து குழந்தை பெற்றெடுத்துக் கொள்வார்கள் என கூறப்படுகிறது.

இவர்களுக்கு ஒரு வேளை ஆண் குழந்தை பிறந்தால் அவர்களை வேறொரு கிராமத்திற்கு தத்து கொடுத்து விடுவார்களாம். முதலில் 10 பெண்கள் மட்டுமே வாழ்ந்து வந்த கிராமம் தற்போது 900க்கும் மேற்பட்ட பெண்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women's only live in special village in Kenya


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->