அதிர்ச்சியில் உலக நாடுகள்!...இஸ்ரேல்-ஈரான் இடையே எரியும் தீயில் எண்ணெயை ஊற்றி விட்டுள்ள ட்ரம்ப்!
World countries in shock trump has poured oil on the fire between israel and iran
இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்ததில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.இதனையடுத்து இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது.
அதன்படி இஸ்ரேலில் உள்ள நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்த நிலையில், லெபனான் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் போர் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி உலை கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது இது உலக நாடுகளை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டிரம்ப், இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஈரானுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடத்த கூடும் என்று கருதப்படுகிறது.
English Summary
World countries in shock trump has poured oil on the fire between israel and iran