இந்த சிட்டியில் வாழணும்னா லட்சத்தில் தான் சம்பளம் வாங்கணும் போல - உலகின் டாப் ஆடம்பர நகரங்கள்!
World Rich Citys
நியூயார்க், சிங்கப்பூர் நகரங்கள் உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
மக்கள் வசிப்பதற்கும், ஆடம்பரமாக செலவு செய்வதற்கும், செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் உலக அளவில் நியூயார்க், சிங்கப்பூர் முதன்மை இடங்களை பிடித்துள்ளன.
அமெரிக்காவின் 'எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்' என்ற அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பு புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு 172 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதில், உலக அளவில் அதிக செலவு இல்லாமல் வசிப்பதற்கு ஏற்ற நகரங்களில் சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ் மற்றும் லிபியா நாட்டின் திரிபோலி முதல் இடங்களை பிடித்துள்ளன.
அதன்படி, உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதன்மை இடங்களை பிடித்துள்ளன.