ஸபோரிஸியா அணுமின் நிலையத்தில் தாக்குதல்.! உக்ரைன் மற்றும் ரஷ்யா பரஸ்பர குற்றச்சாட்டு
Zaporizhia power plant attack Ukraine and Russia accuse each other
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரின் தொடக்கத்திலிருந்தே ஸபோரிஸியா அணுமின் நிலையப் பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. மேலும் ரஷ்ய படைகள் அணுமின் நிலையத்தை தாக்குதல் நடத்தும் ராணுவ தளமாக மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அணுமின் நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள நிகோபோல், மாா்ஹானெட்ஸ் பகுதிகளில் ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அப்பகுதி முழுவதும் கதிர்வீச்சு கசிய கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என்று உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைன் படையினர் அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், கிட்டத்தட்ட ஆறு குண்டுகள் அனுமின் நிலையத்தின் மீது வீசப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் இகாா் கொனஷென்கோவ் தெரிவித்துள்ளார்.
English Summary
Zaporizhia power plant attack Ukraine and Russia accuse each other