நடு ரோட்டில்.. ரத்த காட்டேரி, ஜாம்பி, மண்டை ஓடு.. கூட்டம் கூட்டமாய் வீடியோ எடுக்கும் மக்கள்.! - Seithipunal
Seithipunal


சண்டியாகோவில் நடந்த ஜாம்பி திருவிழா புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

மேலை நாடுகளில் பொதுவாக வித்தியாசமான பல திருவிழாக்களை காணலாம். சமீபத்தில் அக்டோபர் முதல் வார  பீர் திருவிழா குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த பீர் திருவிழாவில் பலரும் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கூட்டம் கூட்டமாக வந்து பீர் குடித்து திருவிழாவை கொண்டாடினார்கள். 

அந்த வகையில் தற்போதுசண்டியாகோவில் சாம்பி திருவிழா நடைபெற்றது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சிலி தலைநகர் சாண்டியா கோவில் சாம்பி திருவிழா நடைபெற்ற போது அதில் இளைஞர்கள், முதியோர்கள், சிறுவர்கள் என அனைவரும் கொடூரமான ரத்த காட்டேரிகள், ஆவிகள் போன்ற உடைகளை மற்றும் ஒப்பனைகளை செய்து கொண்டு சாலைகளில் வலம் வந்தனர். 

இந்த நிகழ்ச்சியானது கலிபோர்னியாவில் 2001 முதல் நடைபெற்று வருகிறது. 21 ஆண்டுகளாக இது ஒரு பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்கின்றனர். 

சாண்டியா கோவில் நடைபெற்ற இந்த சாம்பி திருவிழாவில் சாம்பி போல கொடூரமாக ஒப்பனை செய்து கொண்டு சாலைகளில் சென்று பொது மக்களை பயமுறுத்தி வருகின்றனர். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

zombie festival walk in san deigo


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->