நாங்குநேரி மாணவர் சின்னதுரையை தாக்கிய 02 பேரை கைது செய்துள்ள போலீசார்..!
Police have arrested 02 people who attacked Nanguneri student Chinnadurai
திருநெல்வேலி நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த மாணவர் சின்னத்துரையை கடந்த 02 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 02 படித்துக் கொண்டிருந்த போது சக மாணவர்களால் அரிவாளால் வெட்டபட்டார்.
இந்த தாக்குதல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தற்போது கல்லூரியில் படித்து வரும் அவர், மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானார். இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபர் ஒருவர், தங்களுக்கு திருமண அழைப்பிதழ் தரவேண்டும் என கூறி சின்னத்துரையை தனி இடத்துக்கு அழைத்துள்ளார்.

இதனை நம்பிச் சென்ற சின்னதுரையை, 04 பேர் கொண்ட கும்பல் அவரிடம் பணம் கேட்டுத் கேட்டு தாக்கியுள்ளனர். அவரிடம் பணம் இல்லாத நிலையில், செல்போனை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த சின்னத்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சின்னதுரை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சங்கரநாராயணன் மற்றும் சக்திவேல் ஆகிய 02 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 02 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி, பணம் பறிக்கும் நோக்கில் சின்னதுரையை வரவழைத்து தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 03 பேரை போலீசார் 02 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Police have arrested 02 people who attacked Nanguneri student Chinnadurai