ஜம்மு-காஷ்மீரில் 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!
Sudden earthquake in Jammu and Kashmir
ஜம்மு-காஷ்மீரில் இன்று மதியம் 01.21 மணியளவில் (இந்திய நேரப்படி) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 03.01 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
05 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.11 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 75.96 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Sudden earthquake in Jammu and Kashmir