லிப்ட் கொடுத்த நபரை நிர்வாணப்படுத்தி, பணம், செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிப்பு..! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காலாஞ்சிமேடு பகுதியில் சந்தோஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் சந்தோசிடம் லிப்ட் கேட்டுள்ளார். சந்தோஷும் அந்த நபருக்கு லிப்ட் கொடுத்துள்ளார்.

சிறிது தூரத்தில் அங்கிருந்த நான்கு பேர், பைக்கில் சென்ற சந்தோஷை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று நிர்வாணப்படுத்தியுள்ளனர். அத்துடன், அவரிடம் இருந்த 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் செல்போன் மற்றும் இருச்சக்கர வாகனத்தை பறித்துச் சென்றுள்ளனர். 

இதுகுறித்து சந்தோஷ் போலீசில் புகார் அளித்துள்ளார். குறித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The man gave him a lift was stripped naked and the money cell phone and two wheeler were snatched away


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->