தேர்தல்கள் முடிந்தன.. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கமல்ஹாசன் கருத்து.!!
kamalhaasan tweet for petrol price
இந்தியாவில் தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது, சிறிதளவில் இறக்கம், ஏற்றம் கண்டு வந்தது. கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதிகரிக்கும் விலையால் பிற பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 137 நாட்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்து ரூ.102.91-க்கும், டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து, ரூ. 92.95-க்கும் விற்பனை ஆகிவருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
விலை உயர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே என பதிவிட்டுள்ளார்.
English Summary
kamalhaasan tweet for petrol price