வேற லெவல் : மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் கார் விவரம் வெளியானது! - Seithipunal
Seithipunal


மஹிந்திரா நிறுவனம் XUV400 எலெக்ட்ரிக் கார் விவரங்களை வெளியிட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம், அதன் புதிய XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி மூலம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கி உள்ளது. 

இதன் சிறப்பு அம்சங்கள்:

• புதிய மஹிந்திரா XUV400 மாடல், டூயல் டோன் பெயிண்ட், மூடப்பட்ட கிரில் பகுதி மற்றும் X வடிவ இன்சர்ட்கள் கொண்டிருக்கிறது.

• இதில், ட்வின் பீக் லோகோ, ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது.

• மேலும், ஃபாக் லைட்கள், இவி சார்ஜிங் அவுட்லெட் வழங்கப்பட்டுள்ளது‌.

• இதன் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்களில் சில்வர் நிற அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன. 

• புதிய மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் காரில் 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கல் மற்றும் டூயல் டோன் ORVMகள் வழங்கப்பட்டுள்ளது.

• பிளாக்டு அவுட் பி பில்லர்கள், ரூப் ரெயில்கள், முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்கள் மற்றும் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த காரில் 39.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த பேட்டரியை 50 கிலோவாட் டிசி பாஸ்ட் சார்ஜர் மூலம் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 50 நிமிடங்களே ஆகும். 

• மேலும், 7.2 கிவோவாட் 32 ஏ அவுட்லெட் மூலம் 6 மணி 30 நிமிடங்களில் 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்து விடலாம். 

• ஸ்டாண்டர்டு 3.3 கிலோவாட் 16 ஏ சாக்கெட் மூலம் சார்ஜ் செய்தால் 13 மணி நேரம் ஆகும். 

• மேலும், இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 456 கிமீ ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahindra XUV400 electric car details


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->