தங்கத்தை முந்திய மல்லிகை பூ.!! விலை கேட்ட மக்களுக்கு ஷாக்.!! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தில் பூக்களின் விலை வரலாறு காணாத வகையில் கிடுகிடு உயர்ந்துள்ளது. நெல்லையில் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை 6000 ரூபாயாக உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் 5,825 ரூபாய் விற்பனையாகும் நிலையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக புலம்பினர்.

தென் மாவட்டங்களில் தொடர் கனமழை, வெள்ள பாதிப்புகளால் விளைச்சலில் கடும் சரிவு ஏற்பட்டதால் பூக்களின் விலை உயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மல்லிகை பூ கிலோ 6000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 2500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அதே வேளையில் ரோஜா, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. நாளை தை மாதத்தின் முதல் முகூர்த்தம் என்பதால் பூக்கள் விலை உயர்வை கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One kg jasmine flower rs6000 in thirunelveli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->