இனி அலைய தேவையில்லை.. "UPI மூலம் கடன் வசதி".. ரிசர்வ் வங்கி ஒப்புதல்..!!
RBI approved Loan facility through UPI
இந்திய வங்கி சேவை துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களிடையே யுபிஐ போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பரவர்த்தனைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்ற புள்ளி விவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் டிஜிட்டல் தளத்தில் யுபிஐ வளர்ச்சியை கருத்தில் கொண்டு யுபிஐ நெட்வொர்க் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற நிதி கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர் "நாட்டில் 75% சிறு வணிகத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை யுபிஐ மேற்கொண்டு பலமான அமைப்பாக உள்ளது. தற்பொழுது பொறுப்பே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம் யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் கடன் பெறும் திட்டம் அமலில் உள்ளது.
இதை மேலும் விரிவாக்கும் விதமாக யுபிஐ மூலம் பெறப்படும் கடன்களை வங்கிகள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. கிரெடிட் கார்டு அமைப்பை போலவே இது செயல்படும்" என தெரிவித்துள்ளார்.
புதிய யூசர்களை உருவாக்க தேவையில்லை எனவும், ஏற்கனவே வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் நேரடியாக கடன் வழங்கலாம் எனவும், மேலும் கிரெடிட் கார்டு அட்டை போன்ற வழங்க தேவையில்லை அத்துடன் எதிர்காலத்தில் யுபிஐ கிரெடிட் திட்டத்தை என்பிஎஃப்சி மூலம் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
English Summary
RBI approved Loan facility through UPI