இணையசேவை இல்லா UPI பணப்பரிவர்த்தனை வரம்பு ₹500 ஆக உயர்வு.!! - Seithipunal
Seithipunal


வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்கள் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் "நமது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறிவரும் நிலையில் உலக வளர்ச்சியில் 15 சதவீதம் பங்களிக்கிறது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 6.5% என்ற விகிதமே தொடரும். சில்லரை விற்பனையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் இணையசேவை இல்லாமல் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகையை ₹200ல் இருந்து ₹500 ஆக அதிகரிக்கப்படுகிறது" என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். இந்த சேவையானது Near Field Communication மூலம் UPI எண் மூலம் பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RBI increased offline UPI transfers rs200 to rs500


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->