77 வயது முதியவரை அடித்து இழுத்து சென்ற டாக்டர்; மத்தியில் அதிர்ச்சி..!
Doctor beat and dragged a 77 year old man
மத்திய பிரதேசத்தில் 77 வயது முதியவர் ஒருவரை டாக்டர் ஒருவர் அடித்து இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ம.பி.,யின் சத்தார்பூர் மாவட்டத்தை சேர்ந்த உதவ்லால் ஜோஷி என்ற 77 வயது முதியவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவியை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
அப்போது ராஜேஷ் மிஸ்ரா என்ற டாக்டர் மட்டுமே பணியில் இருந்துள்ளார். இதனால், மனைவி்கு சிகிச்சை கிடைக்க தாமதமாகியுள்ளது. அப்போது அந்த முதியவர் டாக்டரை அணுகி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ராஜேஸ் மிஸ்ரா மற்றும் மற்றொருவர் இணைந்து ஜோஷியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அத்துடன், முதியவர் என்றும் பாராமல் அவரை இழுத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஜோஷி கூறியதாவது: சீட்டு வாங்கி முறையாக வரிசையில் வந்தேன். ஆனால், எனது முறை வரும் போது டாக்டர் தாக்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தலைமை மருத்துவர் கூறுகையில், மருத்துவமனையில் கூட்டம் இருந்தது. அப்போது, ஜோஷி வரிசையில் வராமல், முன்னாள் வந்து நின்றதாக தெரிவித்த்துள்ளார்.
கடந்த வியாழன் அன்று நடந்த சம்பவம் தற்போது வீடியோ வெளியானதால் பலரின் கவனத்திற்கு வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
English Summary
Doctor beat and dragged a 77 year old man