இணைய சேவையில் புதிய மைல்கல்; 10ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா..! - Seithipunal
Seithipunal


இணைய சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், சீனா 10ஜி இணைய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக இருக்கிறது. இணைய பயன்பாட்டை பொறுத்தவரை, அதன் வேகம் முக்கியமான ஒன்று. 2ஜி-யில் தொடங்கிய இணைய சேவை, 3ஜி, 4ஜி என அதிகரித்து, தற்போது, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 10ஜி இணைய சேவையில், பதிவிறக்க வேகம் 9834 Mbps, பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக உள்ளது. இந்த வளர்ச்சி சீனாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி சேவையே தற்போது தான் அறிமுகம் ஆகியுள்ள நிலையில், சீனாவில் 10ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A new milestone in internet service China has introduced 10G service


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->