முன்னாள் டிஜிபியை கொலை செய்துள்ள மனைவி; கர்நாடகாவில் பரபரப்பு..!
Wife killed former DGP in Karnataka
கர்நாடகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டுதொடக்கம் 2017-ஆம் ஆண்டு வரை மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாக ஓம்பிரகாஷ் போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு, 2017-ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றுள்ளார். 68 வயதாகும் ஓம்பிரகாஷ் மனைவி பல்லவியுடன் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்து வந்துள்ளார்.
இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில், ஓம்பிரகாஷ் வீடு 2 மாடிகளை கொண்டுள்ளதால், தரை தளத்தில் ஓம்பிரகாஷ் தனது மனைவியுடனும், முதல் மற்றும் 02-வது மாடியில் மகன் வசித்து வருகிறார். இந்நிலையில், ஓம்பிரகாசுக்கும், அவரது மனைவி பல்லவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கடந் சில ஆண்டுகளாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இன்று மதியம் ஓம்பிரகாஷ் மற்றும் பல்லவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பல்லவி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவர் ஓம்பிரகாசை கண்மூடித்தனமாக குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர்சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
பல்லவி தனது கணவரை கொலை செய்து விட்டதாக போலீசாரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் சென்றுள்ளனர்.
வீட்டுக்குள் சென்று போலீசார் பார்த்த போது ஓம்பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.அலோக் மோகன் மற்றும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த், பிற அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தியுள்ளார்கள். முதற்கட்டமாக நடந்த விசாரணையில் ஓம்பிரகாசை, அவரது மனைவி பல்லவியே கத்தியால் குத்திக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, பல்லவி கைது செய்யப்பட்டுள்ளார்.
English Summary
Wife killed former DGP in Karnataka