ஒரே மேடையில் சூப்பராக கலக்கிய முக்கிய ஹீரோயின்கள்.! கண்கொள்ளா காட்சி.!
3 heroine in same stage
கோலிவுட்டில் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் ஹீரோயின்கள் கலந்து கொள்வதே கிடையாது. இது குறித்தது நிறைய தயாரிப்பாளர்கள் அறிவுரை கூறியும் அதையெல்லாம் நடிகைகள் கொஞ்சம் கூட காதில் வாங்கி கொள்வதே இல்லை.
இருப்பினும், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் நடிக்கின்ற முன்னணி நடிகைகள் அவர்கள் நடிக்கின்ற திரைப்பட விழாக்களில் தவறாமல் கலந்து கொள்கின்றனர். ஐதராபாத்தில் நேற்று தெலுங்கு திரைப்படமான 'ஆனவாலு மீகு ஜோஹார்லு' வின் வெளியீட்டிற்கு முந்தைய விழாவில் 3 முன்னணி கதாநாயகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனா கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். ரஷ்மிகா மெல்லிய புடவை அணிந்து மிகவும் கவர்ச்சியாக இருந்தார்.
மேலும், சாய் பல்லவி நன்றாக மினுமினுப்பாக புடவை அணிந்திருந்தார். கீர்த்தி சுரேஷ் சூப்பரான சுடிதார் அணிந்து வந்திருந்தார். 3 முக்கிய ஹீரோயின்களும் ஒரே மேடையில் இருந்து கலக்கியது ரசிகர்களை உற்சாகம் கொள்ள செய்துள்ளது.