மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்: வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


நடிகர் ஜெயம் ரவி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு 'இறைவன்' திரைப்படத்தில் நடித்திருந்தார். 

இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து அந்தோணி பாக்கியராஜ் எழுதிய இயக்கிய ''சைரன்'' திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார். 

இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை புரிந்து 'சைரன்' திரைப்படத்தின் வெற்றிக்காக சுவாமி தரிசனம் செய்தார். 

அதனை தொடர்ந்து அங்கு இருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Jayam Ravi Sami Darshan Madurai Meenakshiyamman Temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->