நியூ என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை - காரணம் என்ன?
actor saranya mokan new photos update social media
நியூ என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை - காரணம் என்ன?
தமிழ் சினிமாவில், யாரடி நீ மோகி, வெண்ணிலா கபடிக்குழு என்று பல படங்களில் நடுத்தவர் சரண்யா மோகன். அதுமட்டுமல்லாமல், நடிகர் விஜய், தனுஷ், நயன்தாரா என்று பல முன்னணி நடிகர்களுக்கு தங்கையாக வலம் வந்தவர்.
இவருடைய குழந்தைத் தனமான ரியாக்சனுக்கு இன்னும் ரசிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால், இவர் திரையுலகில் இருந்து விலகி திருமணம், இரண்டு குழந்தைகள் என்று கேரளாவில் வசித்து வந்தார். பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்ததால், உடல் கேலிக்கு ஆளானார்.
இந்த நிலையில் நடிகை சரண்யா மோகன் ரசிகர்களுக்கு, "கேலி செய்வதை எல்லாம் காதில் வாங்காதீர்கள். உங்கள் உடலுக்கு நீங்கள் நேரம் கொடுங்கள். ஆரோக்கியமான உணவு, வெந்நீர் இதனை தனது டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தினமும் தவறாமல் ஒரு மணிநேரம் பரதநாட்டியம் பயிற்சி செய்யுங்கள். இதுமட்டுமில்லாது, என் உடல் எடை குறைக்க மூன்று மாதங்களுக்கு ஜிம் சென்று பயிற்சி எடுத்தேன்.
அதனுடன் யோகா, வாக்கிங் என்று இவற்றையும் செய்தேன்’ என தனது உடல் குறைந்ததற்கான ரகசியத்தை பகிர்ந்துள்ளார். மேலும், தனது குடும்பத்துடன் உள்ள சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
English Summary
actor saranya mokan new photos update social media