நம்ம குறி முயலுக்கு இல்ல.. "ஜெயிலருக்கு லியோவின் பதிலடியா?" சமூக வலைதளத்தில் காரசார விவாதம்!! - Seithipunal
Seithipunal


ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் ரஜினிகாந்த் சொன்ன குட்டி ஸ்டோரி விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் "காட்டில் பெரிய மிருகங்களை எப்பவும் சின்ன மிருகங்கள் தொல்லை பண்ணிட்டே இருக்கும்.

உதாரணத்துக்கு காக்கா எப்பவும் கழுகை சீண்டே இருக்கும். ஆனால் கழுகு எப்பவும் அமைதியாக இருக்கும். கழுகு பறக்கும் போது அதை பார்த்து காக்கவும் உயரமாக பறக்க நினைக்கும். ஆனால் காக்காவால அது முடியாது. கழுகு இறக்கைய கூட ஆட்டாம எட்ட முடியாத உயரத்துக்கு பறந்துக்கிட்டே இருக்கும். உலகில் உன்னதமான மொழி மௌனம் தான். 

நான் காக்கா, கழுகு என்று சொன்னா உடனே இவரைத்தான் சொல்றேன்னு சோசியல் மீடியால சொல்லுவாங்க. உங்கள குறைக்காத நாயும் இல்ல, குறை சொல்லாத வாயும் இல்ல. இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்ல. நம்ம வேலையை பார்த்துட்டு நேரா போய்ட்டு இருக்கணும்" என பேசியிருந்தார். 

ரஜினியின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்ய காரணம் அந்த சமயத்தில் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. இதனால் விஜயை மறைமுகமாக ரஜினிகாந்த் விமர்சனம் செய்ததாக விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற லியோ படத்தில் வெற்றி விழா கொண்டாட்டத்தில் போது நடிகர் விஜய் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி உள்ளார். விழா மேடையில் பேசிய அவர் "ஒரு காட்டுல மானு, முயலு, யானை, மயில், காக்கா, கழுகு எல்லாம் இருந்துச்சு. அந்த காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போறாங்க. ஒருத்தர் வில், அன்பு வச்சு ஒரு முயலை வேட்டையாடிட்டாரு, இன்னொருத்தர் ஈட்டி வச்சு யானைய குறி வச்சு அதை தவிறவிட்டாரு.

இதுல யாரு வெற்றி பெற்றாங்கன்னு நினைக்கிறீங்க? யானை இலக்காக வச்சு தவறவிட்டவர் தான் வெற்றி பெற்றவர். ஏன்னா நம்மளால எதை ஜெயிக்கவே முடியாதோ அதை ஜெயிக்க நினைக்கிறது தான் வெற்றி. எல்லாரும் பெருசா கனவு காணுங்கள்" என நடிகர் விஜய்யின் ஒரு குட்டி ஸ்டோரி கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் விஜய் பேசி உள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவு விட்டு வருகின்றனர். இதற்கு காரணம் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர போவதாக அறிவித்துவிட்டு கட்சியே தொடங்காமல் அரசியலில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததோடு அரசியல் கட்சியை போன்று பல்வேறு அணிகளை உருவாக்கி அதற்கான நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார். மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை தனது ரசிகர் மன்றம் மூலம் வழங்கி வரும் விஜய் அதனை மேலும் விரிவுப்படுத்த தொடங்கியுள்ளார். இதற்கு இடையே நேற்று நடைபெற்ற லியோ வெற்றி விழாவில் பேசிய நடிகர் அர்ஜுன் விஜய் அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் காரசார விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijays short story sparked debate on social media


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->