விஜய் தேவரகொண்டா மீது நடிகை அனசுயா புகார்! - Seithipunal
Seithipunal


புஷ்பா திரைப்படத்தில் சுனில் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர், தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ். இவரும், நடிகர் விஜய் தேவரகொண்டா, ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். 

விஜய் தேவர் கொண்டாவின் அர்ஜுன் ரெட்டி, லைகர் திரைப்படங்கள் வெளியானபோது, அதை விமர்சனம் செய்த அனசுயாவை, ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். தற்போது குஷி என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார்.

இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியது. படத்தின் போஸ்டர்களை பற்றி சர்ச்சையான கருத்துகளை தெரிவித்திருந்தார் நடிகை அனசுயா. 

இதுகுறித்து நடிகை அனசுயா தெரிவிக்கையில், ஆரம்பத்தில் நாங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் இருந்தோம். அர்ஜுன் ரெட்டி வெளியான போது, அந்த படத்தில் வைக்கப்பட்டிருந்த சில வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டன. அப்போது படத்தை பார்க்க அர்ஜீன் ரெட்டி திரையரங்குகளுக்குச் சென்றபோது ரசிகர்கள் அந்த வார்த்தைகளைக் கூறினர்.

படத்தில் தாயாக நடித்த என்னை அது மிகவும் காயப்படுத்தியது. அந்த மாதிரியான வார்த்தைகளைப் பேச ரசிகர்களை உற்சாகப்படுத்தீர்கள் என்று அவரிடமே சொன்னேன்.இது தொடர்பாக அவர் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டேன். பின்னர் அதை நான் மறந்தே விட்டேன்.

மேலும் என்னைப் பற்றி அவதூறு பரப்புவதற்காக, விஜய் தேவர்கொண்டா சில நபர்களுக்கு பணம் கொடுத்திருக்கிறார், என்ற செய்தியை கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

அவருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது. அவருக்கு என் மீது வெறுப்பு உள்ளதா, இல்லையா என்பது அவருக்கு தான் தெரியும். எனக்கு தெரியாது. எனக்கு மன அமைதி தேவை என்பதால் இதை கண்டுக் கொள்ளாமல், இதிலிருந்து விடுபட்டு, அடுத்த வேலையை பார்க்கச் சென்றுவிட்டேன் என்று அனசுயா கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Anasuya complains against Vijay Devarakonda


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->