கசப்பான அனுபவங்களை தூக்கி எறிந்து, மீண்டும் வெற்றி நடை போடும் பாவனா.!
actress bavana again started her carrier
பிரபல நடிகை பாவனா அவருடைய சொந்த வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சில வருடங்கள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். சமீபகாலமாக அவரது கசப்பான அனுபவங்களை மறந்து அதிலிருந்து வெளியேறி சில படங்களில் நடித்து வருகின்றார்.
கன்னட சினிமாவில் பாவனா அதிகம் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக மலையாள படமொன்றில் அவர் நடிக்க இருக்கிறார். பிங் நோட் என்ற கன்னட படத்தில் தற்போது நடித்து வரும் பாவனா தொடர்ந்து மற்றொரு மலையாள படத்திலும் நடித்து இருக்கிறார்.
இதனை ஆதில் மைமூனாத் அஷ்ரப் இயக்குகின்றார். ஷர்புதீன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் சர்வைவல் என்ற ஷார்ட் பிலிம்மிலும் பாவனா நடித்திருக்கிறார்.
மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு படமாக இருக்கும், இந்த படத்தில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக பாவனா நடித்துள்ளார். மார்பக புற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட ஒரு பெண் அந்த நோயை எதிர்த்துப் போராடி வாழ்க்கையிலும் குத்துச்சண்டையிலும் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
English Summary
actress bavana again started her carrier