"என்னை பார்த்து அப்படி கேக்காதீங்க." வேதனையின் உச்சத்தில் ஜான்வி கபூர்.!  - Seithipunal
Seithipunal


பிரபல தென்னிந்திய நடிகையாக இருந்த ஸ்ரீதேவி பல்வேறு மொழிகளில் நடித்து கலக்கியவர். இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்ற நிலையில், அவர்களில் ஒருவரான ஜான்வி கபூர் பிரபல நடிகையாக இருந்து வருகின்றார்.

இவர் மாடலாகவும், கதாநாயகியாகவும் தனது திறமையை நிரூபிக்க போராடி வருகின்றார். தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கி யோகி பாபு, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 

லேடி சூப்பர் ஸ்டார் கதாபாத்திரமாச்சே? ஜான்வி கபூர் எப்படி நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் வேற லெவலில் நடித்து நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதை நிரூபித்து இருந்தார். என்னதான் இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் கூட அவருடைய நடிப்பு பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை.

இதற்கு காரணம் அவர் வாரிசு நடிகை என்பதுதான். மேலும், பலரும் உங்களுக்கு நடிப்பு வரவில்லை. இந்த ஃபீல்டை விட்டு செல்லுங்கள் என்று கேட்டு அவரை வேதனைப்படுத்தி வருவதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருந்தார். அவருக்கு வாரிசு நடிகை என்ற பெயரும் இது போன்ற கேள்விகளும் மிகுந்த வேதனை அளிப்பதாக கூறி இதை யாரும் செய்யாதீர்கள் என்று கவலையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Janvi kapoor sad about comments


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->