நடிகை மீனா குறித்து வெளியாகும் அந்த தகவல் உண்மையா.? நெருங்கிய நட்புகள் உறுதி.!
actress meena sagar did not have any idea about second marriage
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை மீனா. ஒரு காலகட்டத்தில் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்களுடன் சேர்ந்து நடித்து வந்தார்.
கால்ஷீட் கூட கிடைக்காத அளவிற்கு படு பிசியான நடிகையாக மீனா இருந்து வந்தார். திருமணத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களை கையில் எடுத்து நடித்து வருகின்றார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினியுடன் சேர்ந்து அண்ணாத்த திரைப்படத்தில் மீனா நடித்திருந்தார்.
இத்தகைய நிலையில் மீனாவின் கணவர் வித்தியாசாகர் கடந்த ஜூன் மாதத்தில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது குழந்தை நைனிகாவும் ஒரு நடிகையாக தான் இருக்கிறார். குழந்தையுடன் தனிமையில் இருக்கும் மீனாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் வற்புறுத்தி வந்துள்ளனர்.
ஆனால் இதற்கு மீனா ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது .தொடர்ந்து பெற்றோர் வற்புறுத்திய காரணத்தால் சரி என்று அவர் கூறிவிட்டதாக கூறப்பட்டது. நீண்ட நாள் குடும்ப நண்பரை அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியது.
இந்த தகவலை மீனாவுக்கு நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அவருக்கு மறுமணம் செய்து கொள்கின்ற எண்ணம் சுத்தமாக இல்லை எனவும், பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்தவில்லை என்றும் இந்த தகவல் அனைத்தும் வதந்தி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
actress meena sagar did not have any idea about second marriage