செல்போன் வழியாக பாலியல் குற்றச்சாட்டு! நடிகர் ரியாஸ்கான் விளக்கம்! - Seithipunal
Seithipunal


நடிகர் ரியாஸ் கான் தன்மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகையை பார்த்தது கூட இல்லை என்று  கூறியுள்ளார்.

மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த அறிக்கை வெளியான பின் பல நடிகைகள் தாங்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக கூறி வருகின்றனர். 

இதனைத்தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் இருந்து நடிகர்கள் விலகி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டினார். இதையடுத்து நடிகர் ரியாஸ் கான் தன்னை செல்போன் வழியாக தொடர்புகொண்டு, 'என் ஆசைக்கு இணங்கக்கூடிய உன் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவை' எனக் கூறியதாக நடிகை ரேவதி சம்பத் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரியாஸ் கான் தமிழிலும் மலையாளத்திலும் பிரபல நடிகராக இருப்பவர். இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரியாஸ் கான் தன்மீது பாலியல் குற்றம் சாட்டிய நடிகை யாரென்று கூட தெரியாது. நான் அவரை இதுவரை பார்த்தது கூட இல்லை. எனக்கு மலையாளம் எழுத படிக்க தெரியாது. அந்த நடிகை நான் பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்யட்டும். இதுவரை தன்மீது கிசுகிசு கூட வரவில்லை ' என்று விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Allegation of sex through cell phone Actor Rias Khan Explained


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->