100 ஆண்டு பழமையான மரங்களை அழிக்க முயற்சி - பசுமைத் தாயகம் எதிர்ப்பு! - Seithipunal
Seithipunal


திருக்கழுக்குன்றம் பேரூராட்சி புதிய கட்டிடத்திற்காக பசுமையான மரங்களை அடியோடு அழிக்கும் திட்டதிற்கு பசுமைத் தாயகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

செங்கற்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மாட்டுசந்தை நடைபெறும் இடத்தில் உள்ள பழமையான 100 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்த மாபெரும் ஆலமரம், அரசமரம், புங்கன் மரம் , வேப்பமரம், போன்ற பல்வேறு நாட்டு மரங்கள் அடர்ந்த பகுதியில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டும் பணியை காரணம் காட்டி பசுமையான மரங்களை அடியோடு அழிக்க திட்டமிட்டுள்ளனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பசுமைத்தாயகம் சார்பாக செங்கற்பட்டு சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் கச்சூர் கி.ஆறுமுகம் தலைமையில் பசுமைத் தாயகம் மாவட்ட ஆலோசகர் காயார் ஏழுமலை, திருக்கழுக்குன்றம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பிவிகே வாசு ஆகியோர் பேரூராட்சி அலுவலக அதிகாரியை நேரில் சந்தித்து மரங்களை அழிக்காமல் பேரூராட்சி கட்டிடம் கட்டுமான பணி மேற்கொள்ளுமாறு மனு வழங்கினார்கள்.

பசுமைத்தாயகம் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiukazhukundram Save Trees Pasumai Thaayagam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->