லோகேஷ் படத்தில் சாகும் காட்சியிலாவது நடிக்க வேண்டும் - பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யாப்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் கால் பதித்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக கைதியின் கார்த்தி படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் மிகவும் பிரபலமடைந்தது.

இது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை லோகேஷ் இயக்கினார். இதுவும் நல்ல வெற்றியை கொடுத்தது. அடுத்ததாக நடிகர் கமலஹாசனை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி 2 அல்லது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அனுராக் கஷ்யப் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து பேசியதாவது, எனக்கு லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் எந்த ரோலும் வேண்டாம். ஆனால் செத்தா, லோகேஷ் படத்தில் தான் சாக வேண்டும். ஏனெனில் அவர் தான் நடிகர்கள் புகழைப் பெறும் வகையில் சாகும் காட்சிகளை படத்தில் வைக்கிறார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anurag kashyap wants to die lokesh kanagaraj Film


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->