"விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும்" - நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் அறிவிப்பு.!
Appreciation Ceremony will be held for Vijayakanth Vishal announce
நடிகர் விஜயகாந்த்துக்கு கண்டிப்பாக பாராட்டு விழா நடத்தப்படும் என்று நடிகர் சங்கர் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான நடிகர் விஷால் தற்போது ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் நடிகர் சங்க கட்டிடத்தின் பத்திரத்தை மீட்டது நடிகர் விஜயகாந்த். எனவே அந்த இடத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்துவது தான் சரியான அங்கீகாரமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கண்டிப்பாக நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு பாராட்டு விழா முறையாக நடத்துவோம் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
English Summary
Appreciation Ceremony will be held for Vijayakanth Vishal announce