அதிர்ச்சியில் திரையுலகம் - அயலான் திரைப்பட தயாரிப்பாளர் மருத்துவமனையில் திடீர் அனுமதி.! - Seithipunal
Seithipunal


சிவகார்த்திகேயன் நடிப்பில், ஆர். ரவிகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர்  நடித்துள்ள இந்தப் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

திரை வரலாற்றில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம் என்றால், அது ‘அயலான்’ தான். ‘அயலான்’ இதுவரை உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அயலான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜி.ஆர். ராஜேஷ்-க்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தற்போது அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இதுவரை அவருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ayalan movie producer kgr rajesh addmited hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->