நடிகர் விஜயகாந்த் உடல்நலம் குணமடைய சபரிமலையில் தரிசனம் செய்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கார்த்திகை மாதம் தொடங்கிவிட்ட நிலையில் பலரும் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதமிருந்து மலைக்குச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், அஜித் ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் சபரிமலையில் கோவிலுக்கு பயணம் செய்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திரைப்பட நடிகர்களின் படங்கள் வெற்றி பெற வேண்டி அவர்கள் ரசிகர்கள் சபரிமலையில் பட போஸ்டருடன் தரிசனம் செய்து வருவது வழக்கமாகி வருகிறது. 

அதில், நடிகர்கள் அஜித் நடிக்கும் துணிவு மற்றும் விஜய் நடிக்கும் வாரிசு படங்கள் வெற்றி பெற வேண்டும் என அவர்கள் ரசிகர்கள் பட போஸ்டர் உடன் சபரிமலையில் பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஜயகாந்த் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் வைத்து பிரார்த்தனை செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayyappan devotees pray in sabarimalai in vijaykanth health


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->