குவாட் மாநாடு - தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று அமெரிக்க நாட்டிலுள்ள டெல்வாரே நகரில் வில்மிங்டனில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நான்கு நாடுகளின் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்.

பின்னர், அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்து பேசினார். அப்போது அதிபர் ஜோ பைடன், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், குவாட் மாநாட்டில் பங்கேற்க வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்போன்ஸ் உள்ளிட்டோரையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உற்சாகமாக வரவேற்றார்.

அதன்பிறகு, குவாட் அமைப்பின் தலைவர்கள் நான்கு பேரும் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மாநாடு நடக்கும் இடத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

president modi meet qwat leadern in america


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->